இந்தோனேசியாவில் திருமணம் தாண்டி உடலுறவு வைத்துக்கொண்டால் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற புதிய குற்றவியல் சட்டம் இந்தோனேசியாவின் பாராளுமன்றம் இந்த மாதம் நிறைவேற்றப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கணவன் அல்லது மனைவி அல்லாத ஒருவருடன் உடலுறவு கொண்ட எவரும் அது விபச்சாரமாக கருதப்பட்டு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என்றும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவரின் கணவன் அல்லது மனைவியிடமிருந்தோ அல்லது திருமணத்திற்குக் கட்டுப்படாத குழந்தைகளின் பெறோர்களிடமிருந்து புகார்கள் வந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 144வது பிரிவு சட்டமானது விசாரணை நீதிமன்றத்தில் தொடங்காத வரை புகார்களை திரும்பப் பெறலாம் என்று தெரிவிக்கிறது.
இந்த புதிய குற்றவியல் சட்டம் டிசம்பர் 15 ஆம் தேதி நிறைவேற்றப்படும் என்றும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகப் பயணிகள் உட்பட, இந்தோனேசிய குடிமக்கள் மற்றும் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினர் இருவருக்கும் இந்த விதி பொருந்தும்,என்று இந்தோனேசியாவின் துணை நீதி அமைச்சர் எட்வர்ட் ஓமர் ஷெரீப் ஹியாரிஜ் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…