இந்தோனேசியா:பிறந்த குழந்தைக்கு 38 எழுத்துகளில் வித்தியாசமாக பெயர் சூட்டிய தந்தை..!

Default Image

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர்கள் வைப்பது மாடர்ன் பழக்கமாக மாறியுள்ளது.அதாவது,பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திரைப்படங்கள்,இடங்கள், தனித்துவமான விஷயங்கள்,கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மற்றும் எண்கள் போன்றவற்றின் பெயர்களை சூட்டி வருகின்றனர்.

அந்த வரிசையில்,இந்தோனேசியாவில் வசிக்கும் ஸ்லேமெட் யோகா என்பவர் தனது குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் சூட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்,ஸ்லாமெட் யோகாவின் மனைவி ரிரின் லிண்டாவிற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு பெயர் வைக்கும் பொறுப்பை யோகவே எடுத்துக்கொண்டு தனது குழந்தைக்கு  ‘டிபார்ட்மெண்ட் ஆஃப் ஸ்டாட்டிஸ்டிகள் கம்யூனிகேசன் (புள்ளிவிவர தொடர்புத் துறை)’ என்று பெயரைச் சூட்டினார்.அதற்குக்காரணம் யோகா, 2009 இல் இந்தோனேசிய சிவில் சேவையில் நுழைந்து அரசு ஊழியராக பணியாற்றியுள்ளார்.அதன் பின்னர் புள்ளிவிவர தகவல் தொடர்புத்துறையில் பல ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வந்துள்ளார்.அதன் காரணமாகவே தனது குழந்தைக்கு 38 எழுத்துக்கள் கொண்ட வித்தியாசமான இப்பெயரை வைத்துள்ளார்.

மேலும்,தனது மகன் ‘பக்தியுள்ளவனாகவும்,தன் குடும்பத்தை சிறப்பாக கவனித்துக் கொள்பவனாகவும் வளருவான்’ என்று யோகா கூறினார்.

ஸ்லாமெட் யோகா, தனது குழந்தைக்கு வைத்துள்ள இந்த வித்தியாசமான பெயரால் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்