மாஸ்கோவில் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதல் – 60 பேர் உயிரிழப்பு!
Moscow Terror Attack: ரஷ்யாவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.
ரஷ்யா நாட்டின் தலைநகரமான மாஸ்கோவில் மேற்கு விளிம்பில் அமைந்துள்ள இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கமான குரோகஸ் சிட்டி ஹாலில் திடீரென புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 60 பேர் உயிரிழந்த நிலையில், 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்பொழுது, இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. ராணுவ உடை அணிந்து வந்த பயங்கரவாதிகள் உடலில் துப்பாக்கி ஏந்தியபடியும் வெடி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிது. இதனால், தாக்குதல் நடத்தப்பட்ட முழு அரங்கமும் தீப்பற்றி எரிந்து நாசமடைந்துள்ளது. அரங்கத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
What we know about the terror attack in Moscow, Russia (till 23rd March 2024)
???? On Friday, March 22, 2024, around 5 gunmen dressed in camouflage clothing burst into the Crocus City Hall, a large concert venue on the outskirts of Moscow, just before a sold-out show by the… pic.twitter.com/JrjhMg1nGp
— Buddhi (@buddhimedia) March 23, 2024
பின்னனர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததோடு, அரங்கத்திற்குள் சிக்கியவர்களையும் பத்திரமாக மீட்டனர். மேலும், படுகாயமடைந்த நபர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு பெஸ்லான் பள்ளி ஐஜாக் செய்த சம்பவத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிழந்தனர். இதற்கு பிறகு, ரஷ்யாவில் நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும். ரஷ்யாவில் புதின் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சூழலில், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.