அமெரிக்காவில் இந்திய மாணவருக்கு கத்திக்குத்து! ஐசியூவில் தீவிர சிகிச்சை…
அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் உள்ள ஜிம் ஒன்றில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) அன்று 24 வயதான இந்திய பட்டதாரி மாணவர் வருண் ராஜ் புச்சாவை ஜோர்டான் ஆண்ட்ரேட் (24) என்பவர் கத்தியால் தாக்கியுள்ளார்.
தெலுங்கானாவைச் சேர்ந்த இந்திய பட்டதாரி மாணவர் வருண் ராஜ் புச்சா, அமெரிக்காவில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் தலையில் பல முறை கத்தி குத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. பலத்த காயமடைந்த வருண் ராஜ், தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சந்தேக நபரை காவல் துறையினர் கைது செய்து இந்த தாக்குதலுக்கான கரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, இந்த தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை வருத்தம் தெரிவித்துள்ளது.
இந்திய பட்டதாரி மாணவர் வருண் ராஜ் புச்சா மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்ட செய்திகளால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். அவர் காயங்களில் இருந்து பூரண குணமடைய வேண்டுகிறோம். இந்த சம்பவம் தொடர்பான ஏதேனும் கேள்விகளுக்கு உள்ளூர் சட்ட அமலாக்கத்திற்கு நாங்கள் ஒத்திவைக்கிறோம்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பம் குறித்து வருண் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு, அவர் பயின்று வரும் பல்கலைக்கழக தலைவர் அதிர்ச்சி தெரிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில், “வருண் ராஜ் மீதான தாக்குதலால் நாங்கள் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளோம்.
வல்பெய்ரசோவ் பல்கலைக்கழகத்தில், நாங்கள் ஒருவருக்கொருவர் குடும்பமாக இருப்பதாக கருதுகிறோம். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருடனும் உள்ளன என்று பல்கலைக்கழகத்தின் தலைவர் ஜோஸ் பாடிலா கடந்த புதன்கிழமை போஸ்ட் ட்ரிப்யூனுக்கு வழங்கிய பேட்டியில் கூறினார்.