இந்திய வம்சாவளியை சேர்ந்த மஞ்சுநாத் நாயுடு (36) அபுதாபியில் பிறந்த இவர் துபாயில் வசித்து வந்தார். பெற்றோர்களை இழந்த இவர் ஸ்டாண்ட் அப் காமெடியனாக வலம் வந்தார்.கடந்த 19ம் தேதி துபாயில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மஞ்சுநாத் மற்றும் பல நகைச்சுவைக் கலைஞர்கள் பங்கேற்றனர்.
அந்த நிகழ்ச்சியில் கடைசியாக மேடை ஏறி அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். அப்போது பதட்டமாக இருப்பதாக கூறி அருகில் இருந்த மேசையில் அமர்ந்தார். பின்னர் நிலைதடுமாறி திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது நண்பரும் காமெடியனுமான மிக்தாத் தோஹத்வாலா ,கூறும்போது மஞ்சுநாத் மேடையில் தன்னுடைய கதையை கூறி அனைவரும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். குறிப்பாக இறந்த பெற்றோர்களின் கதையையும் கூறினார்.
அவர் நடிப்பில் ஒரு பகுதியாக தான் மயங்கி விழுந்தார் என அங்கிருந்தவர்கள் எண்ணினார். இதனால் அவர் உண்மையிலே மாரடைப்பு காரணமாக மயங்கி உயிரிழந்துள்ளார். அவருக்கு ஒரு சகோதரர் மட்டுமே உள்ளார். அவருக்கு குடும்ப உறவினராக நாங்கள் தான் இருந்தோம் என கூறினார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…