பிரிட்டன் பிரதமருக்கான இறுதி போட்டியில் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் முதலிடம்
பிரிட்டன் பிரதமருக்கான இறுதிக்கட்ட போட்டியில் ரிஷி சுனக் முன்னிலை.
கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் பிரிட்டிஷ் பிரதமராகப் பொறுப்பேற்க உள்ள இறுதி இரண்டு வேட்பாளர்கள் ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் உள்ளனர்.
பிரிட்டன் பிரதமர் போட்டிக்கு முதலில் பதினொரு வேட்பாளர்கள் தங்கள் பெயர்களை முன்வைத்தனர், ஆனால் கன்சர்வேடிவ் சட்டமியற்றுபவர்களின் வாக்கெடுப்பில், ரிஷி சுனக், லிஸ் ட்ரஸ் மற்றும் பென்னி மோர்டான்ட் 4 சுற்றுவரை கடும்போட்டி நிலவியது.
இதைத் தொடர்ந்து நேற்று(ஜூலை 20) நடந்த 5வது மற்றும் இறுதி வாக்கெடுப்பில், சுனக் த 137 வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்தார், அதே நேரத்தில் டிரஸ் 113 வாக்குகளைப் பெற்றார்.
மேலும் பென்னி மோர்டான்ட் 105 வாக்குகள் பெற்று போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
முடிவுகள் வெளியான சிறிது நேரத்திலேயே சுனக் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய சக ஊழியர்கள் இன்று என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. நாடு முழுவதும் நம் கொள்கையை கொண்டு செல்ல இரவும் பகலும் உழைப்பேன்” என்று தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
Grateful that my colleagues have put their trust in me today.
I will work night and day to deliver our message around the country.
Join the team at https://t.co/3cXn1rFhca pic.twitter.com/ro612xDAcL
— Ready For Rishi (@RishiSunak) July 20, 2022