இஸ்ரேலுக்காக காசா போர் முனையில் நின்ற இந்திய வம்சாவளி ராணுவ வீரர் மரணம்!

Indian-origin Israeli soldiers killed

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடந்த சிறிது நேரத்திலேயே இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுக்க தொடங்கியது. இந்தப் போர் 27 நாட்கள் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு தாக்கியதில் 20 வயதான இந்திய வம்சாவளி இஸ்ரேலிய வீரர் மற்றும் 17 பேர் கொல்லப்பட்டதாக மும்பைக்கான இஸ்ரேல் தூதர் கோபி ஷோஷானி தகவல் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஸ்ரேல் ராணுவ வீரர், ஹலேல் சாலமன் என அடையாளம் காணப்பட்டார். ‘மினி இந்தியா’ என அழைக்கப்படுகிற தெற்கு இஸ்ரேலில் உள்ள டிமோனாவைச் சேர்ந்த அவர், இஸ்ரேலுக்காக காஸா போர்முனையில் நின்று வந்ததாக கூறப்படுகிறது.

ஹலேலின் மறைவுக்கு டிமோனா மேயர் பென்னி பிட்டன் இரங்கல் தெரிவித்தார். அவர் தனது பேஸ்புக்கில், “காசாவில் நடந்த போரில் டிமோனாவின் மகன் ஹாலெல் சாலமன் இறந்ததை நாங்கள் மிகுந்த வருத்தத்துடனும் அறிவிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், நேற்று காசா சுகாதார அதிகாரிகள் அறிக்கையின்படி, கிட்டத்தட்ட நான்கு வாரங்களாக இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் 3,760 குழந்தைகள் உட்பட 9,061 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்