உயிரினங்கள் வாழும் இன்னொரு கோள்? கண்டுபிடித்து அசத்திய இந்திய வம்சாவளி விஞ்ஞானி நிகு மதுசூதன்!
இந்திய வம்சாவளி விஞ்ஞானி நிக்கு மதுசூதன் K2-18b என்ற தொலைதூர கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை கண்டறிந்துள்ளார்.

இது பூமியை விட 2.6 மடங்கு பெரிய “சூப்பர்-எர்த்” வகை கோளாகும். K2-18b, அதன் நட்சத்திரத்தின் வாழக்கூடிய மண்டலத்தில் (Goldilocks Zone) அமைந்துள்ளதால், திரவ நீர் இருக்கக்கூடிய வெப்பநிலையைக் கொண்டுள்ளது. இதன் வளிமண்டலத்தில் நீராவி, கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் மற்றும் டைமெத்தில் சல்ஃபைடு (DMS) ஆகியவை காணப்படுகின்றன.
DMS, பூமியில் உயிரினங்களால் உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறு என்பதால், வேற்று கிரகத்தில் உயிரினம் வாழ்வதற்கான சாத்தியமான அறிகுறியாக பார்க்கப்படுவதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் தெரியவந்திருக்கிறது. இந்த ஆய்வில் முக்கிய பங்காற்றியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி நிகு மதுசூதன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் வானியற்பியல் நிபுணர்.
அவர், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தரவுகளைப் பயன்படுத்தி தனது குழுவுடன் K2-18b இன் வளிமண்டல மூலக்கூறுகளை அடையாளம் கண்டார். அவரது குழு, DMS போன்ற உயிரியல் அறிகுறிகளைக் கண்டறிந்து, வேற்றுக் கிரக உயிரின ஆய்வில் புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.
இந்தக் கண்டுபிடிப்பு, வேற்றுக் கிரகங்களில் உயிரினங்கள் இருக்கலாம் என்ற கருதுகோளுக்கு வலுவான ஆதாரங்களையும் இருப்பதாகவும், K2-18b இன் ஆய்வு, உயிரினங்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கு மேலும் ஆழமான ஆய்வுகள் தேவை எனவும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒரு வேலை ஏலியன் இருக்குமோ என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
இந்த ஆய்வு குறித்து விஞ்ஞானி நிகு மதுசூதன் கூறியதாவது ” டைமெத்தில் சல்ஃபைடு (DMS) இருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது, ஆனால் இது உயிரினங்கள் உண்மையில் இருக்கிறது என்று சொல்ல முடியாது. DMS, பூமியில் கடல் பாசிகளால் வெளியிடப்படும் வாயு என்பதால், இது வேற்றுக் கிரக உயிரினங்கள் வாழலாம் என K2-18b இன் வளிமண்டலத்தில் DMS, நீராவி, மற்றும் மீத்தேன் போன்ற மூலக்கூறுகளைக் கண்டறிந்தது, வேற்றுக் கிரக உயிரின ஆய்வில் ஒரு முக்கிய முன்னேற்றம். ஆனால், இதை உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகள் தேவை.K2-18b மற்றும் இதுபோன்ற கோள்களை மேலும் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.