இந்திய வம்சாவளியினரான சிங்காரம் பலியநேப்பன் எனும் 61வயது நபருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.
சிங்காரம் பலியநேப்பன் (வயது 61) சிங்கப்பூரில் நீண்ட வருடங்களாக வசித்து வருகிறார். இவர் தான் வசிக்கும் பகுதியில் அருகில் வசிக்கும் பணிப்பெண் ஒருவரை லிப்டில் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் , ஒரு சைக்கிள் கடையில் இருந்த நபரை தாக்கியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் ரூ. 680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு..
கடந்த 2022 செப்டம்பர் 28ஆம் தேதி பாதிக்கப்பட்ட பணிப்பெண் தனது வீட்டுவேலைப்பணியை பார்க்க சென்ற போது, பின்தொடர்ந்த சிங்காரம், ஒரு கடையில் அந்த பெண்ணிற்கு பானம் வாங்கி கொடுத்துள்ளார். அதனை அந்த பெண் வாங்க மறுத்துள்ளார். பின்னர் சிங்காரம் வற்புறுத்தி அந்த பானத்தை வாங்க வைத்துள்ளார்.
அதன் பிறகு தான் வீட்டு வேலை செய்யும் அடுக்குமாடி குடியிருப்புக்கு பெண் சென்றுள்ளார். அந்த பெண்ணை சிங்காரம் பின்தொடர்ந்து உள்ளார். லிப்டில் அந்த பெண் உள்ளே நுழைந்ததும், சிங்காரமும் உள்ளே நுழைந்து 17வது மாடிக்கான பொத்தானை அழுத்தியுள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட தொடங்கியுள்ளார். அந்த பெண்ணின் மார்பகத்தை தொட துணிந்தார் என்றும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை பாதுகாப்பு அதிகாரிகளிடம் பணிப்பெண் புகார் அளித்ததன் பெயரில் சிங்காரம் ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 1 மாதம் கழித்து ஜாமீனில் வெளியே வந்த சிங்காரம், தான் வசித்து வந்த பகுதி அருகில் உள்ள சைக்கிள் கடையில் இருந்த யோங் சு காய் என்பவரை தாக்கி மண்டையை உடைத்துள்ளார்.
மேற்கண்ட இரு குற்ற சம்பவங்களை தவிர்த்து மேலும் 2 குற்ற சம்பவங்கள் சிங்காரம் மீது பதிவாகின. இந்த வழக்குகள் அண்மையில் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்திய வம்சாவளி நபர் சிங்காரத்திற்கு 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…