அமெரிக்க உளவுத்துறையில் இந்திய வம்சாவளியா? யார் இந்த ‘துளசி கபார்டு’?
அமெரிக்க அமைச்சரைவில், அந்நாட்டின் உளவுத்துறைத் தலைவராக 'துளசி கபார்டை', டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்வாகியுள்ள டோன்லட் டிரம்ப் வரும் 2025-ம் ஆண்டில் அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்க இருக்கிறார். இந்த இடைப்பட்ட நாட்களில் அவர் தனது அமைச்சரவையில் தன்னுடன் பணிபுரிய உள்ளவர்களை தேர்வு செய்து வருகிறார்.
அதன்படி, முன்னதாக தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமியை அமெரிக்க நாட்டின் செயல்திறன் துறையின் தலைவராக நியமனம் செய்தார் டிரம்ப். அதனைத் தொடர்ந்து தற்போது, அமெரிக்காவின் உளவுத்துறை தலைவராக துளசி கபார்டை டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.
யார் இந்த துளசி கபார்டு?
பலரும் துளசி கபார்டை, அவரது பெயரை வைத்து இந்திய வம்சாவளி என தவறாக நினைத்து வருகிறார்கள். ஆனால், துளசி கபார்டு அமெரிக்காவின் சமோவாவில் பிறந்தவர். அதன் பின் ஹவாயில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். பின் தனது 21-வது வயதில் ஹவாய் சட்டசபைக்கு தேர்வாகி ராணுவத்திலும் ஒரு சில காலம் பணியாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு களத்திலும் பணியாற்றினார். இதன் விளைவாக கடந்த 2013-ம் ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு துளசி தேர்வானார்.
துளசி, ஒரு அமெரிக்க பெண்மணி தான். அவருக்கு இந்த பெயர் வருவதற்கான காரணம் அவரது தாயார் தான். துளசியின் தாயார் ஹிந்து மதத்தின் ஈர்ப்பின் காரணமாக அவர் ஹிந்து மாதத்திற்கு மாறினார். இதனால், அவரது பிள்ளைகளுக்கு ஹிந்து பெயர்களை வைத்தார்.
இதனால், தான் அவருக்கு துளசி கபார்டு எனும் பெயர் வந்தது. மற்றபடி அவர் அமெரிக்கர் தான். கடந்த 2022-ம் ஆண்டு, ஜனநாயக கட்சியில் இருந்த போது அந்த கட்சியில் இருந்து கொண்டே அக்கட்சியை விமர்சனம் செய்தார். உக்ரைனில் அமெரிக்க நிதியுதவியுடன் பயோ ஆய்வகங்கள் செயல்பட்டு வருவதாக அவர் ஜனநாயக கட்சியைக் கூறியது பெரும் சர்ச்சையானது.
இதன் காரணமாக பலரும் அப்போது துளசி கபார்ட்டை ரஷ்ய உளவாளி என்று அழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு அக்கட்சியிலிருந்து வெளியேறி குடியரசு கட்சிக்கு சென்று சேர்ந்துவிட்டார். தற்போது அவருக்கு, டிரம்ப் அரசு அமெரிக்காவின் உளவுத்துறை தலைவராக பொறுப்பு வழங்கியுள்ளது.