உலக வங்கியின் அடுத்த தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்கா உறுதி செய்யப்பட்டுள்ளார்.
உலக வங்கியின் அடுத்த தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்கா (வயது 63) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதுவரை உலக வங்கியின் தலைவர் பதவிக்கு போட்டியிட அஜய் பங்கா மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், போட்டியின்றி தேர்வானார். உலக வங்கியின் தலைவராக அஜய் பங்காவை உலக வங்கி நிர்வாக இயக்குனர்கள் ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர்.
உலக வங்கியின் அடுத்த தலைவராக தேர்வாகியுள்ள அஜய் பங்கா 5 ஆண்டுகள் பதவி வகிப்பார் என கூறப்படுகிறது. மேலும், உலக வங்கியின் தலைவராக ஜூன் மாதம் 2-ஆம் தேதி பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சேர்ந்த அஜய் பங்கா, மாஸ்டர்கார்டு நிறுவனத்தில் தலைவராக பதவி வகித்தவர்.
தற்போது அவர் அமெரிக்காவின் ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். அஜய் பங்காவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது.மேலும், உலக வங்கியின் தலைவராக அஜய் பங்காவை அமெரிக்க அரசால் பரிந்துரைக்கப்படுவார் என்று அதிபர் ஜோ பைடன் கடந்த பிப்ரவரியில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…