அமெரிக்காவில் குப்பையில் வீசப்பட்ட 7.25 கோடி பதிப்புள்ள லாட்டரி டிக்கெட்,திருப்பிக்கொடுத்த இந்திய வம்சாவளி குடும்பம்

Published by
Hema

குப்பையில் தூக்கி எரியப்பட்ட லாட்டரி டிக்கெட்டில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு.இந்திய குடும்பத்தின் நேர்மையை பாராட்டும் அமெரிக்கர்கள்.

அமெரிக்காவில் லியா ரோஸ் ஃபீகா என்ற பெண், மார்ச் மாதத்தில் சவுத்விக் நகரில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்திற்குச் சொந்தமான லக்கி ஸ்டாப் என்ற கடையில் டயமண்ட் மில்லியன்ஸ் என்ற லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார்.

அந்த டிக்கெட்டை பாதியாக ஸ்க்ராட்ச் செய்துவிட்டு, அதற்கு பரிசு விலவில்லை என்று நினைத்து வாங்கிய கடையிலேயே திருப்பிக்கொடுத்து தூக்கி எறியும்படி கூறிவிட்டு அவர் சென்றுள்ளார். மேலும் டிக்கெட் முழுமையாக ஸ்க்ராட்ச் செய்யாமல் 10 நாட்கள் வரை கடையில் குப்பையில் கிடப்பதை அபிஷா (கடை உரிமையாளரின் மகன் ) பார்த்துள்ளார்.

இதுகுறித்து அபிஷா கூறுகையில் இந்த டிக்கெட்டை எனது தாய் அருணா ஷா அவர்களின் வழக்கமான வாடிக்கையாளர்களில் ஒருவருக்கு விற்றார்,அது சரியாக ஸ்க்ராட்ச் செய்யப்படாமல் குப்பையிலே இருந்தது.

“ஒரு மாலைப் பொழுதில் ,நான் குப்பையிலிருந்து அந்த டிக்கெட்டை எடுத்து ஸ்க்ராட்ச் செய்தபொழுது ,அந்த டிக்கெட்டுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்” பரிசு விழுந்துள்ளதை அறிந்தேன் என்று அபி கூறினார்.

“நான் ஒரு இரவு கோடீஸ்வரன்” என்று அபிஷா நகைச்சுவையாக கூறினார்.

இதனை முதலில் லியா ரோஸ்சிடம் திருப்பி கொடுக்காமல் டெஸ்லா கார் வாங்க அருணா ஷா நினைத்துள்ளார். ஆனால் இந்தியாவில் உள்ள அவரது தாய் மற்றும் தாத்தா, பாட்டி அறிவுறுத்தலின் படி அந்த டிக்கெட்டை அதற்கு சொந்தமான லியா ரோஸ்சிடம் ஒப்படைத்துள்ளார்.

அந்த டிக்கெட்டை திரும்பப் பெற்ற ரோஸ் அவர்களை வாழ்த்தியதுடன் நன்றியையும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த குடும்பம் இப்போது உலக முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Published by
Hema

Recent Posts

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

30 minutes ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

36 minutes ago

வன்கொடுமை விவகாரம் : மாணவி புகார் பெறப்பட்டது எப்படி? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

51 minutes ago

அந்த சார் யார் என்பதை காவல்துறை மறைக்கிறது – திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

1 hour ago

கிண்டல் செய்த ரசிகர்கள்! செம கடுப்பான விராட் கோலி!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…

2 hours ago

பாலியல் வழக்கு விசாரணை சந்தேகங்களை எழுப்புகிறது! அண்ணாமலை பதிவு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

3 hours ago