India - USA 2+2 Meeting held on Delhi [File Image]
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையானது தலைநகர் டெல்லியில் கடத்த நவம்பர் 10ஆம் தேதி துவங்கியது. 2+2 பேச்சுவார்த்தை என்பது இரு நாடுகளை சேர்ந்த இரு துறை அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டமாகும்.
இதில், இந்தியா சார்பில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்ந்தா சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்றனர். அமெரிக்கா சார்பில் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ‘ இந்த ஆலோசனை கூட்டமானது, வெளிப்படையான கருத்துக்களை உள்ளடக்கிய இரு நாடுகளுக்கு இடையேயான சர்வதேச விதிகளை மேம்படுத்துவதற்கான தீர்மானத்தை இந்த கூட்டறிக்கை வெளிப்படுத்துகிறது.
இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்தும் QUAD வழிமுறைகள் மூலம் இந்தோ-பசிபிக் கடல்வழி வர்த்தகங்கள், உலகளாவிய பிரச்சினைகளான ரஷ்யா- உக்ரைன் விவகாரம், மற்றும் மத்திய கிழக்கில் உள்ள (இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்) துயரமான போர் மற்றும் அதன் விளைவுகள பற்றியும் இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர்.
பயங்கரவாதத்திற்கு எதிராக இஸ்ரேலுடன் தங்கள் நிலைப்பாட்டை அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியது. ஆனால் இந்த போரில் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதை குறைக்க முயல வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கா-இந்தியா தொழில்துறை ஒத்துழைப்பு, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பதிற்கான விரிவாக்கப்பட்ட ஒத்துழைப்பு போன்றவை குறித்தும் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
நம்மைத் துன்புறுத்தும், நம்மைப் பிரிக்கும் தொழில்நுட்பத்துக்குப் பதிலாக, நம்மை இணைக்கும், நம்மைப் பாதுகாக்கும் தொழில்நுட்பத்துக்குப் பதிலாகவும், உலக நன்மைக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கே இரு நாட்டு அறிவியலையும், தொழில்நுட்பத்தையும், விரிவுபடுத்துவதற்கான வழிகளைப் பற்றி இரு நாடுகள் விவாதித்தன.
கடந்த ஆண்டில், நாங்கள் (அமெரிக்கா) பல துறைகளில் முன்னேற்றங்களை கண்டுள்ளோம். அமெரிக்க தனியார் துறை நிறுவனங்களால் இந்திய தொழில்நுட்பத்தில் பல பெரிய முதலீடுகள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையேயான உரையாடல்கள், விண்வெளி, பாதுகாப்பு இணை உற்பத்தி மற்றும் கிரக பாதுகாப்பு போன்றவற்றைச் சுற்றி விரிவடைகின்றன என்றும் அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…
ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார்…
தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி…
சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…