உலக பாஸ்போர்ட் தரவரிசை.! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்.?
பாஸ்போர்ட் தரவரிசை: உலகளாவிய சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் தரவரிசை பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் 82வது இடத்தில் உள்ளது.
லண்டனை சேர்ந்த பிரபல உலகளாவிய குடியுரிமை ஆலோசனை நிறுவனமான ஹென்லி பார்ட்னர்ஸ் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலானது ஒரு நாட்டின் பாஸ்போர்ட் கொண்டு எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். விசா இல்லாமல் ஒரு நாட்டின் பிரஜையை எத்தனை நாடுகள் வரவேற்கும் என்பதை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.
அதன்படி, ஹென்லி பாஸ்போர்ட் தரவரிசையின் கீழ், சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. அந்நாட்டு பாஸ்போர்ட் கொண்டு 195 நாடுகளுக்கு விசா தேவை இன்றி அந்நாட்டு மக்கள் பயணிக்கலாம். இரண்டாவது இடத்தில் பிரான்ஸ் உள்ளது. அந்நாடு 192 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை பெறுகிறது.
அடுத்தடுத்த இடங்களில் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த தரவரிசை பட்டியலில் 82வது இடத்தில் உள்ள இந்தியாவின் பாஸ்போர்ட் கொண்டு 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். ஹென்லி பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலை henleygolbal.com எனும் தளத்தில் முழுதாக காணலாம்.
ஹென்லி பாஸ்போர்ட் தரவரிசை டாப் 10 :
முதல் இடம் :
சிங்கப்பூர் – 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
2வது இடம் :
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் கொண்டு 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
3வது இடம் :
ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, தென் கொரியா, ஸ்வீடன் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் கொண்டு 191 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்.
4வது இடம் :
பெல்ஜியம், டென்மார்க், நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் கொண்டு 190 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்.
5வது இடம் :
போர்ச்சுக்கல் நாட்டின் பாஸ்போர்ட் கொண்டு 189 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்.
6வது இடம் :
கிரீஸ், போலந்து ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் கொண்டு 188 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்.
7வது இடம் :
கனடா, ஹங்கேரியா, மால்டா ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் கொண்டு 187 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம்.
8வது இடம் :
அமெரிக்காவின் பாஸ்போர்ட் கொண்டு 186 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.
9வது இடம் :
எஸ்டோனியா, லிதுவேனியா, ஐக்கிய அரபு நாடுகள் (துபாய்) நாடுகளின் பாஸ்போர்ட் கொண்டு 185 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம்.
10வது இடம் :
ஐஸ்லாந்து, லாட்வியா, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் கொண்டு 184 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம்.
103வது இடம் :
கடைசி இடமான 103வது இடத்தில் ஆப்கானிஸ்தான் நாடு மட்டும் உள்ளது. அந்நாட்டு பாஸ்போர்ட் கொண்டு 26 நாடுகளுக்கு மட்டும் விசா இன்றி பயணிக்காலம்.