CAA அமலாக்கம் கவலை அளிக்கிறது.. கருத்து கூறிய அமெரிக்கா! பதிலடி கொடுத்த இந்தியா!
CAA : நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2019 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படுவதாக மார்ச் 11ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 2014, டிசம்பர் 31க்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்தர்கள், சமணர்கள் உட்பட 6 சமூகத்தினருக்கு (இஸ்லாமியர்கள் தவிர) குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.
Read More – குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யும் அதிகாரம் எந்த மாநில அரசுக்கும் இல்லை.. அமித்ஷா அதிரடி.!
இந்த சட்டம் மூலம், மதத்தின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்த மத்திய பாஜக அரசு நினைக்கிறது. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. இங்கு மதத்தின் அடிப்படையில் குடியுரிமை என்பது ஏற்க கூடியது அல்ல என எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டத்தின் (சிஏஏ) அறிவிப்பு குறித்து கவலைப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படுவதாக இந்திய அரசின் அறிவிப்பு கவலை அளிக்கிறது. இந்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மத சுதந்திரத்திற்கான மரியாதை, சட்டத்தின் கீழ் அனைத்து சமூகங்களும் சமமாக நடத்தப்படுவது அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் என்றார்.
Read More – உணவுக்காக காத்திருந்தபோது நேர்ந்த சோகம்.! காசா தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு.!
இதையடுத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் பலரின் கருத்துக்கள் குறித்து MEA செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது, சிஏஏ என்பது இந்தியாவின் உள்விவகாரம் மற்றும் இந்தியாவின் உள்ளடக்கிய மரபுகள் மற்றும் மனித உரிமைகளுக்கான நீண்டகால அர்பணிப்பாகும்.
இந்தியாவின் பன்மைத்துவ மரபுகள் குறித்து வரையறுக்கப்பட்ட புரிதல் உள்ளவர்கள், சட்டத்தில் தவறான தகவல் மற்றும் தேவையற்ற கருத்துகளை கூறக்கூடாது. CAA என்பது குடியுரிமை வழங்குவது, குடியுரிமையைப் பறிப்பது அல்ல. இந்தியாவில் குடிபெயர்ந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்த சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது.
Read More – பாஜகவின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும்… மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை!
எனவே, CAA அமலாக்கம் குறித்து அமெரிக்கா மற்றும் பலர் தெரிவித்த கருத்துகளைப் பொறுத்தவரை, அது தவறான தகவல் மற்றும் தேவையற்ற கருத்துகள் என்று நாங்கள் கருதுகிறோம் என பதிலளித்தார். மேலும், இந்திய அரசியலமைப்பு அதன் குடிமக்கள் அனைவருக்கும் மத சுதந்திரத்தை உறுதி செய்கிறது. சிறுபான்மையினரைப் பற்றி கவலைப்படுவதற்கும் அல்லது நடத்துவதற்கும் எந்த அடிப்படையும் இல்லை.
துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவும் ஒரு பாராட்டத்தக்க முயற்சியைப் பற்றிய கருத்துக்களை வாக்கு வங்கி அரசியல் தீர்மானிக்கக் கூடாது. புரிதல் கொண்டவர்கள் தவறான கருத்துக்களை தெரிவிக்காமல் இருப்பது நல்லது. இந்தியாவுடன் நெருங்கிய உறவில் இருப்பவர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்க வேண்டும் என்றுள்ளார்.