இந்தியா – கனடா உறவில் மேலும் விரிசல் ! 14 இந்திய தூதரக முகாம்கள் மூடல்!

போதிய பாதுகாப்பு தரமறுத்ததால் நடைபெற இருந்த சிறப்பு முகாம்களை ரத்து செய்துள்ளது இந்திய துணைத் தூதரகம்.

India - Canada Embassy

ஒட்டாவா : கனடாவில் இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்திருந்த தூதரக சேவை முகாம்களுக்கு, கனடா பாதுகாப்பு அதிகாரிகள் அதாவது அந்நாட்டு அரசு போதிய பாதுகாப்பு  மறுத்துள்ளது. இதனால், கனடாவில் நடைபெற இருந்த 14 சிறப்புமுகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த நவ.-3 ஆம் தேதி. கனடாவில் பிராம்டன் நகரில் உள்ள ஹிந்து சபா கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் அங்கிருந்த பக்தர்களை சரமாரியாக தாக்கினார்கள். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில், தற்போது 14 முகாம்களை ரத்து செய்வதாக இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கனடாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் முகாம்களை நடத்துவதற்கு குறைந்தபட்ச பாதுகாப்பைக்கூட கனடா அரசு தர முடியவில்லை.

இதனால் இந்திய துணைத் தூதரகம் சார்பில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த சேவை முகாம்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன” என பதிவிட்டு தெரிவித்திருந்தனர். பிராம்டன் நகரில் உள்ள கோயிலில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், இந்தச் சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் வருத்தம் தெரிவித்தார். இது போன்ற சம்பவங்கள் இந்தியா- கனடா இடையே இருக்கும் உறவிற்கு மேலும் விரிசலை ஏற்படுத்தி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்