மியான்மருக்கு எதிரான ஐநாவின் தீர்மானத்தில் வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா.!
மியான்மருக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தில் வாக்களிப்பதில் இந்தியா புறக்கணித்துள்ளது.
மியான்மரில் நடைபெற்றுவரும் ராணுவ ஆட்சியைக் கண்டித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில்(UNSC) மியான்மருக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றுவதில் வாக்கெடுப்பு நடத்தியது. மியான்மரில் ராணுவ ஆட்சியின் மூலம் மரணதண்டனை, அதிகார துஷ்பிரயோகங்களுக்காக நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் இருந்து இந்தியா புறக்கணித்துள்ளது.
இந்தியா உட்பட ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் மியான்மருக்கு எதிரான இந்த வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன. மேலும் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா தவிர ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அனைத்து உறுப்பினர் நாடுகளும் வாக்குகளை அளித்துள்ளன. மியான்மர் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில்(UNSC) நிறைவேற்றிய முதல் தீர்மானம் இதுவாகும்.