அதிகரித்துவரும் கோவிட் நோயாளிகள்! இருக்கையிலேயே மயங்கி விழுந்த சீன மருத்துவர், வீடியோ உள்ளே.!
சீனாவில் அதிகரித்துவரும் கோவிட் நோயாளிகளால், இருக்கையிலேயே சீன மருத்துவர் மயங்கி விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது.
2020 ஆம் ஆண்டு தொடங்கி கொரோனா வைரஸ் இந்த உலகை பாடாய்படுத்தி எடுக்க காரணமாக இந்த வைரஸ் முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் வேளையில் தற்போது மீண்டும் சீனாவில் இதே கொரோனா வைரஸ் அங்கு தலை தூக்க ஆரம்பித்துள்ளது.
தினமும் இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சீனாவிலுள்ள ஒரு மருத்துவமனையில், மருத்துவர் ஒருவர் முடிவில்லாத நோயாளிகளின் வருகையைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, சோர்வினால் இருக்கையிலேயே மயங்கி விழும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.
கொரோனா வைரஸ் இன் புதிய ஓமிக்ரான் BF-7 எனும் இந்த வைரஸ் சீனாவில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பரவிவருகிறது. தினமும் மக்கள் மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர். மேலும் மற்றொரு வீடியோவில் தரையில் கிடக்கும் மருத்துவருக்கு சிகிச்சை செய்து வருகின்றனர்.
官方说没有重症,看看重庆医科大学附属第一医院 急诊留观区域。 pic.twitter.com/UsGiKoS4gG
— iPaul???????????????? (@iPaulCanada) December 20, 2022