உக்ரைனில், ரஷ்யா ட்ரோன் தாக்குதல்! தகர்த்த உக்ரைன்.!
உக்ரைனில், ரஷ்யா இரவில் நடத்திய ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக உக்ரைன் தகர்த்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று இரவில் 23 ட்ரோன்கள் மூலம் தன்னிச்சையாக வெடிக்கும் விமானங்களை அனுப்பி தாக்கியுள்ளது. இதில் 18 ட்ரோன் விமானங்களை சுட்டுத்தள்ளியதாக உக்ரைன் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த தாக்குதலில் சில அடுக்குமாடிக் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பாக உக்ரைன் மீது ரஷ்யாவால் இதுவரை இல்லாத, ஒரேநாளில் 70 க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா, உக்ரைனின் மின்கட்டுமான அமைப்புகளின் மீது குறிவைத்து பல தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அந்த வகையில் ரஷ்யா, இரவில் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது, மேலும் உயிரிப்புகள் ஏதும் இல்லை எனவும் 2 பேர் காயமடைந்ததாக உக்ரைன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர், விளாடிமிர் புதின் நட்பு நாடான பெலாரஸுக்கு சென்று, பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது, இந்த நிலையில் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.