“ஆர்டர் செய்த ஆப்பிள் பழங்களுடன் இலவசமாக வந்த ஆப்பிள் ஐபோன்..!”

Default Image

இங்கிலாந்தில்,நிக் ஜேம்ஸ் என்பவர் ஆப்பிள் பழங்களை ஆர்டர் செய்து வாங்கிய போது அதில் ஆப்பிள் ஐபோன் இருப்பதைக்கண்டு ஆச்சரியம் அடைந்தார்.

இங்கிலாந்தில் வசிக்கும் 50 வயதான நிக் ஜேம்ஸ் என்பவர்,ஆன்லைன் மூலம் சூப்பர் மார்க்கெட்டில் ஆப்பிள் பழங்களை  ஆர்டர் செய்துள்ளார்.ஆனால்,டெலிவரி வந்த பார்சலில் ஆப்பிள் பழங்களுடன் ஐபோன் ஒன்று இருந்துள்ளதைக் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தார்.

இதுகுறித்து,நிக் ஜேம்ஸ் ட்விட்டரில் தெரிவித்தது, “நாங்கள்,புதன்கிழமையன்று ஆன்லைன் மூலம் ஆப்பிள் பழங்கள் ஆர்டர் செய்தோம்.அப்போது,எங்களுக்கு ஒரு சிறிய ஆச்சரியம் காத்திருந்தது.அது என்னவென்றால் டெலிவரி வந்த பார்சலில் பழங்களுடன் ஆப்பிள் ஐபோன் ஒன்று இருந்தது,இதனால்,எனது மகனுடைய மகிழ்ச்சியான வாரமாக இந்த வாரம் இருக்கும்” என்று கூறி, ஐபோன் வழங்கியதற்காக டெஸ்கோவிற்கு நன்றி தெரிவித்தார்.

டெஸ்கோவானது,உலகில் உள்ள மூன்றாவது பெரிய மளிகை மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற இதர பொட்களை விற்பனை செய்யும் நிறுவனமாகும்.டெஸ்கோ நிறுவனம்,அதன் ஆன்லைன் கடை உரிமையாளர்களுக்காக இந்த வித்தியாமான விளம்பரப்படுத்துதலை மக்களிடம் நடத்தி வருகிறது.ஆகவேதான்,நிக்கிற்கு ஆப்பிள் பழங்களுடன் ஆப்பிள் ஐபோனை அனுப்பியுள்ளது.

மேலும், இங்கிலாந்தில் உள்ள பல விற்பனை நிலையங்களில்  80க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விளம்பரத்திற்காக டெஸ்கோவால் இலவசமாக வழங்கப்படுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்