“வரியை திரும்ப பெறுங்கள்., இல்லையென்றால்?” சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்கா விதித்த வரிக்கு எதிரொலியாக சீனா விதித்த வரியை இன்றைக்குள் திரும்ப பெற வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

US President - China President

வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு  மற்ற நாடுகள் என்ன இறக்குமதி விதிக்கிறதோ, அதே அளவில் கணக்கிட்டு அந்தந்த நாடுகளின் பொருட்கள் அமெரிக்காவில்இறக்குமதி ஆகும் போதும் அதே அளவு வரி இருக்கும்படி புதிய வரி விதிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

அதனை அடுத்து, சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு பரஸ்பர வரி 34% வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இந்த உத்தரவை அடுத்து, கடந்த ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா, அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி உயர்வுக்கு பதிலடி கொடுத்தது.

தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டிரம்ப், சீனா அரசு அமெரிக்க பொருட்கள் மீதான வரியை திரும்ப பெறவேண்டும் இல்லை என்றால் ஏப்ரல் 9க்கு பிறகு சீன பொருட்களுக்கு அமெரிக்காவில் வரியை உயர்த்தி 50% வரி விதிக்கப்படும் என சீனாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். சீன அரசு தனது புதிய வரி உயர்வை ஏப்ரல் 8 (இன்று) திரும்பப் பெறாவிட்டால், ஏப்ரல் 9 (நாளை) முதல் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இது அமெரிக்கா-சீனா இடையே ஒரு புதிய வர்த்தகப் போரை தூண்டக்கூடும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்