அமெரிக்க தேர்தலில் 100 ஆண்டுகளில், சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதில் தோல்வி.!
100 ஆண்டுகால அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக முதல் வாக்கெடுப்பில், சபாநாயகரை தேர்ந்தெடுப்பதில் தோல்வி.
அமெரிக்க காங்கிரஸில் 100 ஆண்டுகளில் முதன்முறையாக, பிரதிநிதிகள் சபை முதல் வாக்கெடுப்பில் சபாநாயகரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் தோல்வி ஏற்பட்டது. குடியரசுக் கட்சியின் கெவின் மெக்கர்த்தியின், சபாநாயகர் பதவிக்கான முயற்சி அவரது கட்சி உறுப்பினர்களால் தடுக்கப்பட்டது. சபாநாயகர் ஆவதற்குத் தேவையான 218 வாக்குகளில் மெக்கார்த்தி மூன்று வாக்குகளில் தோல்வியடைந்தார்.
ஜனாதிபதி பதவிக்காக வரிசையில், இரண்டாவது இடத்தில் உள்ள கலிபோர்னியா காங்கிரஸார் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தனிப் பெரும்பான்மை தேவை என்பது குறிப்பிடத்தக்கது. மெக்கர்த்தி, இந்த வாக்குகளைப் பெரும் முயற்சியில் தோல்வியடைந்தார்.
புதிய காங்கிரஸின் தொடக்கத்தில் சபாநாயகரைத் தேர்ந்தெடுக்க, ஒரு சுற்றுக்கு மேல் வாக்கெடுப்பு நடத்தப்படுவது 1923க்கு பிறகு இது என்பது குறிப்பிடத்தக்கது.