தபால் மூலம் வாக்கு செலுத்திய இம்ரான் கான்… விறுவிறுப்பாக நடைபெறும் பாகிஸ்தான் தேர்தல்!

Imran Khan

உச்சகட்ட பதற்றமான சுழலில் மத்தியில் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

பின்னர் பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், இம்ரான் கான் மீது அரசு ரகசியம் கசிவு, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனால், இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், ஆட்சி கவிழ்ந்தது. இதன்பின், எதிர்க்கட்சிகளின் சார்பில் ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார்.

அவரது ஆட்சிக்காலமும் முடிவதற்கு 3 நாட்களுக்கு முன்பாக அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனிடையே, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், வன்முறை, குண்டுவெடிப்பு சம்பவம் மற்றும் பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்…. மொபைல் சேவைகளை நிறுத்தி உள்துறை அமைச்சகம் உத்தரவு!

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் சுமார் 12 கோடி பேர் வாக்களிக்கின்றனர். பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பதற்காக இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரசிய தலைவர்கள், பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பாகிஸ்தானில் நேற்று அடுத்தடுத்த 2 குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தபால் மூலம் தனது வாக்கை செலுத்தினார். ஆனால், முன்னாள் பிரதமரின் மனைவி புஷ்ரா பீபி வாக்களிக்கவில்லை, ஏனெனில் அவர் தபால் மூலம் வாக்களிக்கும் செயல்முறை முடிந்த பிறகு கைது செய்யப்பட்டார். இதுபோன்று சிறையில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களும் தபால் மூலம் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

தபால் மூலம் வாக்களித்த அரசியல் தலைவர்களில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, முன்னாள் பஞ்சாப் முதல்வர் சவுத்ரி பர்வேஸ் இலாஹி, அவாமி முஸ்லீம் லீக் தலைவர் ஷேக் ரஷீத் மற்றும் முன்னாள் தகவல் அமைச்சர் ஃபவாத் சவுத்ரி ஆகியோர் அடங்குவர். இம்ரான் கான் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது கட்சியினர் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் நிலையில் பாகிஸ்தானில் மும்முனை போட்டி நிலவுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 26122024
virat kohli fight
minister regupathy
Ind vs Aus - Boxing Day Test
FIR banned
Comrade Nallakannu - Tamilndu CM MK Stalin
Mutharasan - Vaiko - Nallakannu - MK Stalin - K Balakrishnan