ஒரு பெண்ணுடன் ‘ஆபாசமாக’ பேசி சர்ச்சையில் சிக்கிய இம்ரான் கான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர் இம்ரான் கான், ஒரு பெண்ணுடன் ‘ஆபாசமாக ‘ பேசிய ஆடியோ பதிவு இணையத்தில் கசிந்ததையடுத்து, புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்த ஆடியோ கிளிப்பை பாகிஸ்தான் பத்திரிகையாளர் சையத் அலி ஹைதர் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். அந்த ஆடியோ கிளிப்பில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் எனக் கூறப்படும் ஒருவர், ஒரு பெண்ணிடம் ஆபாசமான மொழியில் பேசுவதைக் கேட்க முடிகிறது.
வைரலான ஆடியோ இம்ரான் கானுடையதா என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில்,அவரது கட்சியான பிடிஐ, இது அவரது பெயரை படுகொலை செய்வதற்கான முயற்சி என்று கூறியுள்ளது.