தேர்தலில் போட்டியிட இம்ரான் கானுக்கு 5 ஆண்டுகள் தடை.! பாகிஸ்தான் தேர்தல் வாரியம் உத்தரவு.!
பரிசு பொருட்களை சட்டவிரோதமாக விற்றதாக குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிற்கு 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமாராக இம்ரான் கான் இருந்த காலத்தில் அயல் நாட்டு பிரதமர்கள் உட்பட பலர் கொடுத்த பரிசு பொருட்களை சட்டவிரோதமாக விற்றதாக இம்ரான் கான் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றசாட்டு சம்பந்தமாக விசாரணை நடத்திய பாகிஸ்தான் தேர்தல் ஆணையம், இம்ரான் கானிற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு பொதுப்பணியில் இருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பொது தேர்தலில் போட்டியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.