உக்ரைன் போரை நிறுத்த புதின் விரும்பினால், அவருடன் பேசத் தயார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
கடந்த 10 மாதங்களாக உக்ரைனில் போரை நடத்தி வரும் ரஷ்யா தற்போது உக்ரைனுடனான போரை நிறுத்தும் வழியை விரும்பினால் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசத்தயார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட 10 மாதங்களாகி முதன்முறையாக அமெரிக்கா போரை நிறுத்த புதினுடன் பேசுவதாக கூறியிருக்கிறது.
செய்தி கூட்டு மாநாட்டில் பங்கேற்ற பைடன் இது குறித்து கூறியதாவது, போரை நிறுத்தவேண்டும் என்று உண்மையில் ரஷ்ய அதிபர் புதின் விரும்பினால், அவருடன் பேசத்தயார், அதுவும் நேட்டோ(NATO) உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து போரை நிறுத்தும் வழி குறித்து புதினுடன் பேச தயாராக இருப்பதாக கூறினார்.
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், அமெரிக்காவும் நேட்டோவும், உக்ரைன் போரில் நேரடியாக பங்கேற்று வருபவர்கள். ஏனெனில் அவர்கள் உக்ரைனின் கீவ்வுக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறார்கள் மற்றும் இராணுவ பயிற்சியையும் அளித்து வருகிறார்கள்.
உக்ரைனின் மின்சார கட்டமைப்பின் மீதான ரஷ்ய தாக்குதல்கள், ரஷ்யர்களைக் காப்பாற்ற செய்த தாக்குதல் என்று கூறினார். போரில் ரஷ்யர்களைக் கொல்ல உக்ரைனுக்கு ஆபத்தான ஆயுதங்களை அனுப்புவதைத் தடுக்க ரஷ்யா, இவ்வாறு மின்கட்டமைப்பு ஆற்றல் வசதிகள் மீது தாக்குதல் நடத்தி முடக்கியது என்று கூறினார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…