Categories: உலகம்

இவரை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.15 லட்சமாம்..! என்ஐஏ அறிவிப்பு..!

Published by
செந்தில்குமார்

கனடாவின் தீவிரவாத கும்பலைச் சேர்ந்த லக்பீர் சிங் என்கிற லாண்டா பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும்.

கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங் சந்து என்கிற லாண்டாவுக்கு எதிராக தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.15 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று  தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அறிவித்துள்ளது. பஞ்சாபின் தர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள ஹரிகே கிராமத்தில் வசிக்கும் லாண்டா ஹெராயின், ஆயுதங்கள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி வெடிபொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

15 lakh reward

மேலும் கடந்த ஆண்டு, மொஹாய் நகரில் உள்ள பஞ்சாப் காவல்துறையின் உளவுத்துறை தலைமையகம் மற்றும் தர்ன் தரன் மாவட்டத்தின் சர்ஹாலி கிராமத்தில் உள்ள காவல் நிலையம் ஆகியவை கையெறி குண்டு வீசி தாக்கப்பட்டன. இந்த தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட லக்பீர் சிங் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். தற்போழுது கனடாவின் ஆல்பர்ட்டாவில் உள்ள எட்மண்டனில் அவர் தலைமறைவாக வசிப்பதாக தகவல்கள் உள்ளன.

இதையடுத்து லக்பீர் சிங் பற்றி  தகவல்களை அளிப்பவர்களுக்கு ரூ.15 லட்சம் பரிசுத்தொகையாக அறிவித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் லக்பீர் சிங் பற்றி  தகவல் தெரிந்தால், புது தில்லியில் உள்ள என்ஐஏவின் தலைமையகத்தின் இலவச அலைபேசி எண் 011-24368800, வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் எண் +91-8585931100 மற்றும் மின்னஞ்சல் முகவரி do.nia a@gov.in இல் பகிரலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

மாணவர்களுக்கு குட் நியூஸ்! தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…

15 minutes ago

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

9 hours ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

11 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

12 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

12 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

13 hours ago