24 மணிநேரத்தில் பாலஸ்தீன மக்களை வெளியேற்றாவிட்டால் பட்டினி சாவு ஏற்படும்.! ஐநா எச்சரிக்கை.!

Gaza Peoples will die to hunger

ஹாமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது போர் தொடுத்ததை தொடர்ந்து, இஸ்ரேலும் பதில் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீன பகுதியான காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்த தொடர் தாக்குதலில் இதுவரை 1,200 பாலஸ்தீனியர்களும், 1,300 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர்.

காசா பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் அங்கு வசிக்கும் பாலஸ்தீனிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் அங்கு மருத்துவ சிகிச்சை, மற்ற அன்றாட தேவைகள் பெறுவதற்கு மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

உணவு, தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக காசா நகரில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அவர்கள் காசா பகுதி எல்லையில் இஸ்ரேல், எகிப்து நாட்டின் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். காஸாவில் உள்ள மக்கள் நிலை குறித்து ஐநா கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது

“ஐஎஸ்ஐஎஸ்” இயக்கம் ஒடுக்கப்பட்டது போல் “ஹமாஸ்” இயக்கம் ஒடுக்கப்படும் – இஸ்ரேல் பிரதமர் பேட்டி!

இதுகுறித்து ஐநா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில். காஸாவில் கடுமையான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.  மேலும், காஸாவில் உணவு, தண்ணீர், மின்சாரம் மற்றும் மருந்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த தட்டுபாடால் காஸாவில் கடுமையான பட்டினி அபாயத்தில் உள்ளனர். இன்னும் 24 மணிநேரத்தில் அங்குள்ள மக்களை வெளியேற்றாவிட்டால் உயிரிழப்புகள் ஏற்பட கூடும். பொதுமக்களை வேண்டுமென்றே உணவில்லாத நிலை ஏற்படுத்துவது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும்.

ஹமாஸ் அமைப்பினர் விளைவித்த கொடூரமான குற்றங்களை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்களை வேண்டுமென்றே பிணைக் கைதிகளாகப் பிடித்து வைப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தின்படி கொடூரமான அத்துமீறல்களாகும், இதற்கு ஹமாஸ் அமைப்பினர் பொறுப்பேற்க வேண்டும்

2.3 மில்லியனுக்கும் (23 லட்சம்) அதிகமான மக்கள் தொகையை கொண்ட காஸாவின் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக இஸ்ரேலின் கண்மூடித்தனமான இராணுவத் தாக்குதல்களை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். அங்குள்ள மக்களில் கிட்டத்தட்ட பாதி பேர் குழந்தைகள். அவர்கள் 16 ஆண்டுகளாக ஐந்து பெரிய தடைகளை கடந்து வாழ்ந்து , சட்ட விரோத பிடிகளின் கீழ் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த அறிக்கை மூலம், ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப் படைகளால் கண்மூடித்தனமாக அப்பாவி பொதுமக்களள் குறிவைத்து தாக்கப்படும் வன்முறைக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறோம். இதில் எந்தவித நியாயமும் இல்லை. இது சர்வதேச சட்டத்தின் கீழ் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ள செயல். இது ஒரு போர்க் குற்றம் என்றும் ஐநா அதிகாரிகள்அந்த செய்தி குறிப்பில் தெரிவித்தனர்.

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஏழு பாலஸ்தீனிய ஊடகவியலாளர்கள் உயிரிழந்தது குறித்தும் , ஐநா கவலை தெரிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்