ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அமெரிக்கா பதிலடி கொடுக்கும்
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா, அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் பயங்கர பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
கடந்த 7 மாதமாக ரஷ்யா மற்றும் உக்ரைன் க்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவுடன், உக்ரைனின் ப்ராந்தியங்களை இணைப்பதற்கான வாக்கெடுப்பு உக்ரைனில் நான்காவது நாளாக நடைபெறுகிறது. ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குப்பெட்டிகள் வீடு வீடாக எடுத்துச்செல்லப்பட்டதாக உக்ரைனின், லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் கூறினார்.
இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா அனு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் ரஷ்யா பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தன் எல்லையை தாண்டினால் அதற்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று சல்லிவன் மேலும் கூறினார்.