“நான் பிரதமராக இருந்திருந்தால் இஸ்ரேல் போர் நடந்திருக்காது”..டொனால்ட் டிரம்ப் பேச்சு!
நவம்பர் 5 -ஆம் தேதி நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இருக்கும் என்று நான் சொல்கிறேன் என டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா : இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. எனவே, நேற்று ஹமாஸ் நடத்திய தாக்குதல்களின் முதல் ஆண்டு நினைவைக் குறிக்கும் சிறப்பு இரங்கல் கூட்டம் இஸ்ரேலில் நடைபெற்றது.
அதைப்போல, இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுக்கும் அமெரிக்காவிலும் இரங்கல் கூட்டம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது, தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேரத்தை ஒதிக்கு அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு சில விஷயங்களை வெளிப்படையாக பேசினார்.
அதில் அவர் பேசியதாவது, “கடந்த ஆண்டு அக்டோபர் 7 -ஆம் தேதி நடந்த போர் மறக்க முடியாத ஒரு வரலாற்று நிகழ்ச்சி. அந்த நாள் இஸ்ரேல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாளாக இருக்கும். கண்டிப்பாக நான் அந்த சமயம் இஸ்ரேலின் பிரதமராக இருந்திருந்தேன் என்றால் நிச்சயமாக இந்த போரை நடத்த விட்டிருக்க மாட்டேன்”, என கூறினார்.
இஸ்ரேலுக்கு தொடர்ச்சியாக ஆதரவாக பேசி வரும் ட்ரம்ப் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிணைப்பு முன்பை விட வலுவாகவும், நெருக்கமாகவும் இருக்கும்” எனவும் கூட்டத்தில் வெளிப்படையாக பேசினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “வருகின்ற நவம்பர் 5 -ஆம் தேதி நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இருக்கும். இது இஸ்ரேலின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாகவும் அமைந்துள்ளது. ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய இந்த தாக்குதலை நாம் ஒரு போதும் மறந்துவிடக் கூடாது”, எனவும் டொனால்ட் ட்ரம்ப் கூறி இருந்தார்.