கூகுள் தேடல் முடிவு தவறு என நிரூபித்தால், கூகுள் அந்த தரவுகளை நீக்கவேண்டும்- நீதி மன்றம்
கூகுள் தேடல்முடிவு தவறு என நிரூபித்தால், கூகுள் அந்த தரவுகளை நீக்க ஐரோப்பிய ஒன்றிய நீதி மன்றம் தெரிவித்துள்ளது.
உலகில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் தேடல் தளமாக கூகுள் தேடுதளம் இருக்கிறது. யாருக்கு எந்த தகவல் வேண்டுமானாலும் கூகுளில் தேடினால் அது உடனடியாக கிடைக்கும், மேலும் சரியானதாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதி மன்றம், கூகுளின் தேடல் முடிவுகள் தவறானது என நிரூபிக்கும் பட்சத்தில் கூகுள் நிறுவனம், அந்த தரவுகளை நீக்கவேண்டும் என அறிவித்துள்ளது. முதலீட்டு நிறுவனங்களின் குழுவைச் சேர்ந்த இரண்டு நிர்வாகிகள், கொடுத்த வழக்கில் நீதி மன்றம் இவ்வாறு அறிவித்துள்ளது.
அவர்களது குழுவின் முதலீட்டு மாதிரியை விமர்சிக்கும் சில தகவல்களுடன் கூடிய கட்டுரைகளில் தங்கள் பெயர்களை இணைக்கும் சில தேடல் முடிவுகளை அகற்றுமாறு அவர்கள் கூகுளிடம் கேட்டிருந்தனர். இதற்கு கூகுள் மறுத்துள்ளதால் அவர்கள் கூகுளுக்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தனர்.