“பிடிக்கிறதோ இல்லையோ பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பேன்” டிரம்ப் கொடுத்த வாக்குறுதி!
பெண்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ அவர்களை பாதுகாப்பேன் என விஸ்கான்சினில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வாக்குபதிவு நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கை மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஆர்கன்சாஸ், புளோரிடா, இந்தியானா, மேற்கு வர்ஜீனியா, கென்டக்கி, தென் கரோலினா, டென்னசி, ஓக்லஹோமா, அலபாமா, மிசிசிப்பி உள்ளிட்ட மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று கமலா ஹாரிஸை விட முன்னிலையில் உள்ளார்.
குறிப்பாக, டொனால்ட் டிரம்ப் 230 எலக்டோரல் வாக்குகளுடன் முன்னிலைஇதில் உள்ளார். கமலா ஹாரிஸ் 187 வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார். டிரம்ப் வெற்றியை உறுதி செய்ய 40 வாக்குகள் மட்டுமே தேவையாக இருக்கிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், யார் வெற்றிபெறப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அமெரிக்க மக்களுக்கு மத்தியில் எழுந்திருக்கிறது.
இந்த சூழலில், வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு விஸ்கான்சினில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட டொனால்ட் டிரம்ப் தான் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பேன் என வாக்குறுதி அளித்தார். இது குறித்து பேசிய அவர் ” நானே நாடு முழுவதும் உள்ள மக்களை பாதுகாக்க விரும்புகிறேன். என்னுடன் ஆலோசகர்கள் பெண்களை பாதுகாக்கவேண்டும் என கூறினார்கள். நான் அதற்கு அவர்களிடம் சொன்னேன்.
நான் ஆட்சிக்கு வருவது பெண்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ அவர்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள பல விஷயங்களை கொண்டு வருவேன் என்றேன். நம்மளுடைய நாட்டில் பெண்கள் வளர்ச்சிக்கு என்னென்ன செய்யவேண்டும்..அவர்களை பாதுகாக்க என்னென்ன செய்யவேண்டும் என எல்லா விஷயங்களையும் யோசித்து வைத்திருக்கிறேன் கண்டிப்பாக செய்வேன்” என வாக்கு உறுதி அளித்தார்.