நேபாள விமான விபத்தில் உயிரிழந்த பணிப்பெண்ணின் தந்தை ஓஷினை விபத்து நடந்த அன்று வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியதாக தெரிவித்துள்ளார்.
நேபாள தலைநகர் காத்மாண்டில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 10:33 மணிக்கு ஏ டி ஆர் 72 விமானம் பொக்காரா நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் 68 பயணிகளும், நான்கு விமான பணியாளர்களும் இருந்தனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர்.
ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரியான மோகன், அலே மாகர் மகள் ஓஷின் அலே மாகர். ஓஷின் எட்டி ஏர்லைன்ஸில் இரண்டு வருடங்களாக பணிபுரிந்து வந்தார். ஓஷினுக்கு இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் உள்ளனர்.
அவர் கைந்தகோட்டில் உள்ள ஆக்ஸ்போர்டு கல்லூரியிலும், படித்தார் மற்றும் காத்மாண்டுவில் உள்ள சஹாரா ஏர் ஹோஸ்டஸ் அகாடமியில் ஏர் ஹோஸ்டஸ் பட்டம் பெற்றார். ஓஷின் போக்ராவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார், அவரது கணவர் தற்போது இங்கிலாந்தில் உள்ளார்.
இந்த நிலையில், விமான பணிப்பெண் ஓஷினின் தந்தை கூறுகையில், விபத்து நடந்த அன்றைய தினம் ஓஷினை வேலைக்கு போக வேண்டாம் என கூறினோம். ஆனால் அவர் வேலைக்கு சென்றதாக உருக்கமாக கூறியுள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…