கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 19 நாட்களாக மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மற்றும் தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலிருந்தும் குழந்தைகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே நடைபெற்று போரில் இதுவரை காசாவில் 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதில் 2,055 குழந்தைகள், 1,119 பெண்கள், 217 முதியவர்கள் என்று கூறப்படுகிறது. அதோடு 15,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கு மத்தியில் 1,500 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் 830 பேர் குழந்தைகள் எனவும் காசா சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தற்போது ஹமாஸ் பயங்கரவாதி பயங்கரவாதி ஒருவர் காசா எல்லைக்கு அருகில் உள்ள கிபுட்ஸ் என்ற இடத்தில் மெஃபல்சிம் என்ற இடத்தில் கொலை செய்த யூத பெண்ணிடம் இருந்து திருடிய போனில் இருந்து தனது பெற்றோருக்கு போன் செய்து, ‘நான் 10 பேரை என் கைகளால் கொன்றேன்’ என்று கூறியுள்ளார்.
இந்த உரையாடலை இஸ்ரேல் தற்காப்புப் படை (IDF) வெளியிட்டுள்ளது. அந்த உரையாடலில், ” உங்கள் மகன் யூதர்களைக் கொன்றுள்ளேன். என் கைகளாலையே எவ்வளவு பேரைக் கொன்றேன் என்று பாருங்கள். நான் என் கைகளால் 10 பேரைக் கொன்றேன். நான் கொன்றவர்களின் புகைப்படங்களை உங்களுக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பியுள்ளேன். அதைப் பாருங்கள்.” என்று பெருமையுடன் கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…