எனக்கு உயிர் இல்லை.. இருந்தாலும் என்னால் ஒரு புதிய கலையை உருவாக்க முடியும்.! அசத்தும் ரோபோட்.!
எனக்கு உயிர் இல்லாவிட்டாலும் என்னால் கலையை உருவாக்கமுடியும் என்று ரோபோட் ஐ-டா(Ai-Da) இங்கிலாந்து சட்ட வல்லுநர்கள் முன்னிலையில் உரையாற்றியது.
புதிய தொழில்நுட்பங்கள் எவ்வாறு படைப்பு தொழில்களைப் பாதிக்கிறது என்ற கேள்விக்கு விளக்கமளிக்கும் விதமாக ஐ-டா(Ai-Da) என்றழைக்கப்படும் “ரோபோ கலைஞர்” பிரிட்டிஷ் பாராளுமன்ற சட்ட வல்லுனர்களிடம், விளக்கம் அளித்தது. அந்த ரோபோட் கூறியதாவது, நான் ஒரு செயற்கை உருவாக்கம் எனக்கு உயிர் இல்லை என்றாலும் என்னால் இன்னும் கலைகளை உருவாக்க முடியும் என்று பேசியது.
உலகின் முதல் மனித வடிவ ரோபோ கலைஞர் என்று அந்த ரோபோட் வர்ணிக்கப்படுகிறது. பெண் வடிவ முகம் மற்றும் விக் தலை முடி பொருத்தப்பட்டு, செயற்கை கைகளும் பொருத்தப்பட்ட அந்த ரோபோட் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டு பிரிட்டிஷ் கணிதவியலாளர் மற்றும் கணினி முன்னோடி “அடா லவ்லேஸ்” நினைவாக அவரது பெயர் வைக்கப்பட்டது.
ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டிஜிட்டல் கமிட்டி நடத்திய தொலைக்காட்சி அமர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஐ-டா(Ai-Da) ரோபோட் பதிலளித்தது. ஐ-டா(Ai-Da) ரோபோட் சமீபத்தில் மறைந்த மகாராணி எலிசபெத்தின் உருவத்தை வரைந்துள்ளது. மேலும் அந்த படம் கண்காட்சிக்காக வைக்கப்பட்டது.
எப்படி படம் வரைய முடிந்தது என்ற கேள்விக்கு தான் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் மற்றும் அல்கோரிதத்தால் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், கண்களில் உள்ள கேமரா மற்றும் செயற்கை கை போன்றவற்றால் படம் வரைய முடிவதாக, ஐ-டா(Ai-Da) ரோபோட் பதிலளித்தது. எனக்குள் உள்ளிடப்பட்டுள்ள தரவீடுகளின் அடிப்படையில் ஒரு புதிய கவிதையினையும் என்னால் உருவாக்கமுடியும் என்றும் ஐ-டா விளக்கியது.
A ‘Robot artist’ called Ai-Da, created by scientists at the University of Oxford, appeared in the UK parliament at an inquiry into how new technologies will affect creative industries https://t.co/XfqKOqxvaA pic.twitter.com/v1j7BBg1pQ
— Reuters (@Reuters) October 12, 2022