அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற முதல் நபர் நான்..! அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு..!
அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற முதல் நபர் நான் என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி.ராகுல்காந்தி கூறியுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது, முதல் முறையாக, அவதூறு குற்றத்திற்காக கிரிமினல் தண்டனை மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் நபர் நான்தான் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல்காந்தி 10 நாள் பயணமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அங்கு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேசிய அவர், நான் அரசியலில் சேர்ந்த போது எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவேன் என்று கற்பனையில் கூட நினைத்து பார்க்கவில்லை என்று ராகுல்காந்தி கூறினார்.
முன்னதாக, மோடியின் பெயர் குறித்த அவதூறு வழக்கில் குஜராத் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனால் மக்களவை எம்.பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.