இந்திய குடியரசுதின விழாவில் பங்கேற்றது எனக்கு பெருமை… பிரான்ஸ் அதிபர் புகழாரம்.!
கடந்த ஜனவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்துகொண்டார். அவர் , இந்திய குடியரசு தினவிழாவில் கலந்துகொண்டது பற்றியும் இந்தியா உடனான பிரான்ஸ் உறவு பற்றியும் பல்வேறு தகவல்களை அண்மையில் கூறியுள்ளார்.
பாஜக எம்பிகளுக்கு வேண்டுகோள்! இன்று மக்களவையில் பிரதமர் மோடி உரை!
இம்மானுவேல் மேக்ரான் தனது எக்ஸ் சமூக வலைதள வாயிலாக கூறுகையில், இந்தியா போன்ற ஒரு ஜனநாயக சக்தி கொண்ட நாட்டில், மக்கள்தொகை, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் என ஒரு நாட்டில் உள்ள எல்லாவற்றையும் பற்றி நாங்கள் கூற வேண்டிய நிலை உள்ளது. உலகின் மாற்றத்தில் இந்தியாவின் வளர்ச்சி என்பது முன்னணியில் இருக்கும்.
அப்படியான இந்தியாவில், ஓர் முக்கியமான மற்றும் தனித்துவமான குடியரசு தின கொண்டாட்டத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்தத்தில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் . இது எப்போதும் எங்கள் நினைவுகளில் இருக்கும் என இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார். மேலும், இந்தியாவில் அதிகமான முதலீடுகளை கொண்டு வரவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் இந்திய நாட்டுடன் பல்வேறு துறைகளில் தொடர்ச்சியான ஒத்துழைப்புகள் மற்றும் கூட்டாண்மைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்தியாவில் மேலும், மேலும் முதலீடுகளைச் செய்ய விரும்புகிறோம். இதுவரை எல்லாம் நன்றாக சென்று கொண்டு இருக்கிறது . இரு நாட்டு உறவும் நன்றாக இருப்பதால் நாம் இன்னும் நிறைய செய்ய முடியும். மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து 30,000 மாணவர்கள் பிரான்சில் படிக்க வருவதற்கு விரும்புவதாகவும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.
மேக்ரானின் பதிவிற்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபரின் சமீபத்திய இந்தியப் பயணம் மற்றும் குடியரசு தின விழாவில் பங்கேற்பது நிச்சயமாக இந்தியா-பிரான்ஸ் நட்புறவை அதிகரிக்கும் என்றும் , இம்மானுவேல் வருகை இந்தியாவிற்கு பெருமை என்றும் தெரிவித்தார்.