நான் ஒரு ஹிந்துவாக இங்கே வந்துள்ளேன்.! இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பேச்சு.!
லண்டன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆன்மீகத் தலைவர் மொராரி பாபுவின் ராமாயண சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான இந்துக்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அவர்களும் கலந்துகொண்டார்
இந்த விழாவில் கலந்துகொண்டது குறித்து,ரிஷி சுனக் கூறுகையில், நான் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இங்கு வரவில்லை . நான் ஒரு இந்துவாக கலந்துகொண்டேன். இந்திய சுதந்திர தினவிழாவில் , இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்றது எனக்கு கிடைத்த கௌரவம் எனவும் ரிஷி சுனக் கூறினார்.
மேலும், என்னைப் பொறுத்தவரை, ராமர் எப்போதும் எனக்கு ஒரு உத்வேகம் தரும் நபராக இருக்கிறார். எனது வாழ்க்கையின் சவால்களை தைரியத்துடன் எதிர்கொள்வதற்கும், பணிவுடன் ஆட்சி செய்வதற்கும், தன்னலமின்றி பணியாற்றுவதற்கும் உதவும் என ரிஷி சுனக் கூறினார்.