ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் திடீரென வெடித்து சிதறியது! தீயணைப்பு துறையினர் தீவிர விசாரணை!
தற்போது பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு அதிகரித்தாலும் உலகம் முழுவதும் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் கார் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பெருகி வருவதாலும் முன்னனி கார் தயாரிப்பு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ஹூண்டாய் நிறுவனம் கோனா எனும் எலெக்ட்ரிக் காரை சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்தது. இந்நிலையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை கனடா நாட்டின் மான்ட்ரியல் பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த மார்ச் மாதம் வாங்கினார் இந்த கார் அவரது கேரேஜில் இருந்தபோது திடீரென வெடித்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் அடிபடவில்லை.
இந்த விபத்து பற்றி தீயணைப்பு துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். முக்கியமாக சார்ஜிங் பிரச்சனை அல்லது பேட்டரி அழுத்தத்தால் கூட இந்த விபத்து நடைபெற்றிருக்கலாம் என, கூறப்பட்டுகின்றன.
இந்த வகை ஹூண்டாய் கோனா காரை தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.