ரஷ்ய தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வண்ணம், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அலுவலகம் மனிதாபிமான உதவி இணையதளத்தைத் தொடங்கியுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போர்
கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா உக்ரைனில் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளது. மேலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உக்ரேனில் இருந்து அகதிகளாக பிற நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
தொடரும் தாக்குதல்
இந்த தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்திய பாடில்லை. உலகநாடுகள் ரஷ்யாவிடம் தாக்குதலை நிறுத்துமாறு அறிவுறுத்தி வரும் நிலையில் அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
மனிதாபிமான உதவி இணையதளம்
இந்நிலையில், ரஷ்ய தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வண்ணம், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அலுவலகம் மனிதாபிமான உதவி இணையதளத்தைத் தொடங்கியுள்ளது. உக்ரைனின் உள்ளூர் ஊடகமான தி கிய்வ் இன்டிபென்டன்ட், “ஜனாதிபதியின் அலுவலகம் மனிதாபிமான உதவி இணையதளத்தை அறிமுகப்படுத்துகிறது. அதிகாரப்பூர்வ இணையதளமான http://help.gov.ua மனிதாபிமான உதவியை எப்படி அனுப்புவது மற்றும் யாருக்கு அனுப்புவது என்பதைக் கண்டறிய உதவுகிறது. போர்டல் தொடர்புகளையும் வழங்குகிறது என தெரிவித்துள்ளது.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…