இன்று பூமியை நெருங்கும் சூரிய புயல் எச்சரிக்கை ! ரேடியோ, ஜிபிஎஸ் செயலிழப்பு ?
இன்று பூமியில் சூரிய புயல் நேரடி தாக்கம் எதிர்பார்க்கப்படுகிறது. ரேடியோ, ஜிபிஎஸ் செயலிழப்பு, இடையூறுகளை ஏற்படுத்தலாம்.
சமீபத்தில்,இயற்பியலாளர் டாக்டர் தமிதா ஸ்கோவ் கூறுகையில் சூரிய புயல் ஜூலை 19 அன்று பூமியை ‘நேரடியாக தாக்கும்’ என்று கணித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இன்று இரவில் ஜிபிஎஸ் மற்றும் ரேடியோ சீர்குலைவுகளை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது”.
நாசா விஞ்ஞானிகளின் கணிப்புகளின்படி, இன்று பூமியைத் தாக்கும், இது ஜிபிஎஸ் மற்றும் ரேடியோ சிக்னல்களில் சில இடர்பாடுகள் ஏற்படலாம். சூரியனில் இருந்து வரும் “பாம்பு போன்ற இழையின்” தாக்கம் “நேரடி தாக்கமாக” இருக்கும்.
புவி காந்த புயல்கள் ஒன்று முதல் ஐந்து வரை ‘ஜி அளவில்’ அளவிடப்படுகின்றன, இதில் ஜி1 சிறியதாகவும், ஜி5 தீவிரமாகவும் இருக்கும். ஜூலை 19 சூரிய புயல் G2 அல்லது G3 அளவில் இருக்கலாம். மார்ச் 2022 இல், G1-வகுப்பு புவி காந்தப் புயல் பூமியைத் தாக்கியது. இது போன்ற சூரியப் புயல்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.