ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!
தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து சுற்றுவட்டார பரந்த நிலப்பரப்பு வரையில் அதிர்வு இருந்தது.
ஈரான், அமெரிக்காவுடன் 3வது அணுசக்தி ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மீட்புப்படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த வெடிவிபத்து எவ்வாறு ஏற்பட்டது என்ற உரிய காரணம் கிடைக்கப்பெறவில்லை. பந்தார் அப்பாஸ் துறைமுகத்தில் பல்வேறு கொள்கலன்களில் சேமித்து வைக்கப்பட்ட பொருட்களில் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது காயமடைந்தவர்களை வெளியேற்றும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.