செங்கடலில் இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்களை குறி வைத்து தாக்கிய ஹூதி.!
Houthi Attack: இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு நவம்பர் முதல் போர் நடைபெற்று வருகிறது. இதில், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு தருவதாக தெரிவித்தனர். இதன் காரணமாக, மத்திய கிழக்கின் செங்கடல் பகுதி வழியாக செல்லும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
READ MORE – ஆப்கானிஸ்தானில் கனமழை, பனிப்பொழிவால் 39 பேர் பலி..! 14000 கால்நடைகள் உயிரிழந்த பரிதாபம்
அந்த வகையில், தற்பொழுது ஏமனின் ஈரானுடன் இணைந்த ஹூதிகள் ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. அதில், செங்கடல் வழியாக வந்த இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்களை குறிவைத்த ஹூதி, கடற்படை ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல்கள் உலகளாவிய கப்பல் போக்குவரத்தை சீர்குலைத்துள்ளது.
READ MORE – இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல்… இந்தியர் ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் காயம்!
ஹூதி தாக்கிய ஒரு கப்பல் தீ எரிந்து நாசமாகியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்திய கடற்படை வீரர்கள் அந்த கப்பலை தீயை அணைக்க உதவி செய்துள்ளது. ஹவுதி தாக்குதலில் வெடிகுண்டு சுமந்து செல்லும் ட்ரோன்கள் மற்றும் ஒரு ஏவுகணை ஆகியவை அடங்கும் என்று அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
READ MORE – உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் பட்டத்தை இழந்தார் எலான் மஸ்க்! முதலிடம் யாருக்கு தெரியுமா?
இதற்கிடையில், கடந்த திங்களன்று ஏடன் வளைகுடாவில் லைபீரியக் கொடியுடன் வணிகக் கப்பல் மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய கடற்படை விரைவாக பதிலளித்துள்ளது. சமீபத்திய வாரங்களில் மேற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள ஏராளமான கப்பல்களுக்கு இந்திய கடற்படை தங்களது உதவியை வழங்கி வருகிறது.