செங்கடல் மற்றும் அரபிக்கடலின் சில பகுதிகள் உட்பட இப்பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது ஆளில்லா விமானம் மற்றும் கடற்கொள்ளையர்களின் தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது. சில கப்பல் நிறுவனங்கள் செங்கடல் வழியாக போக்குவரத்தை இடைநிறுத்தியுள்ளன. மேலும் ஹூதி படைகளுக்கு எதிராக ஏமன் முழுவதும் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து போர் விமானங்கள், கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் அவ்வப்போது பதிலடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஓசியோனிக்ஸ் சர்வீசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மார்லின் லுவாண்டா என்ற வணிகக் கப்பலில் நேற்றிரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலுக்குப் பிறகு கப்பலில் தீப்பிடித்தது. பின்னர், ஏடன் வளைகுடாவில் நிலைநிறுத்தப்பட்ட இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க் கப்பல் தீயை அணைக்க உதவியது.
இது நீதித்துறையை அவமதிக்கும் செயலாகும்! மாநாட்டில் பிரதமர் மோடி உரை!
இதுகுறித்து இந்திய கடற்படை கூறுகையில்” நேற்று இரவு, சரக்குக் கப்பலான எம்வி மார்லின் லுவாண்டாவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது, அதன் பிறகு எரியும் கப்பலில் இருந்தவர்கள் இந்திய கடற்படையின் உதவியை நாடினர். ஏடன் வளைகுடாவில் நிலைநிறுத்தப்பட்ட இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க் கப்பல் உடனடியாக உதவிக்கு இறங்கியது. MV கப்பலில் இருந்த பணியாளர்களுக்கு உதவ NBCD குழு மற்றும் தீயணைப்பு கருவிகளை அனுப்பியது.
MV கப்பலில் 22 இந்திய மற்றும் 1 வங்கதேச மாலுமி உள்ளனர். அவர்களை பாதுகாப்பாக காப்பாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த துணிச்சலான மீட்பு நடவடிக்கை இந்திய கடற்படையின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள கடல் பாதைகளின் பாதுகாப்பில் இந்தியாவின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் இந்த சம்பவம் காட்டுகிறது என தெரிவித்துள்ளது.
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…