வணிகக் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்… உதவி செய்த இந்தியா..!

MarlinLuanda

செங்கடல் மற்றும் அரபிக்கடலின் சில பகுதிகள் உட்பட இப்பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது ஆளில்லா விமானம் மற்றும் கடற்கொள்ளையர்களின் தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது. சில கப்பல் நிறுவனங்கள் செங்கடல் வழியாக போக்குவரத்தை இடைநிறுத்தியுள்ளன. மேலும் ஹூதி படைகளுக்கு எதிராக ஏமன் முழுவதும் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து போர் விமானங்கள், கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் அவ்வப்போது பதிலடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஓசியோனிக்ஸ் சர்வீசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மார்லின் லுவாண்டா என்ற வணிகக் கப்பலில் நேற்றிரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள்  தாக்குதல் நடத்தினர்.  தாக்குதலுக்குப் பிறகு  கப்பலில் தீப்பிடித்தது. பின்னர், ஏடன் வளைகுடாவில் நிலைநிறுத்தப்பட்ட இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க் கப்பல் தீயை அணைக்க உதவியது.

இது நீதித்துறையை அவமதிக்கும் செயலாகும்! மாநாட்டில் பிரதமர் மோடி உரை!

இதுகுறித்து இந்திய கடற்படை கூறுகையில்” நேற்று இரவு, சரக்குக் கப்பலான எம்வி மார்லின் லுவாண்டாவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது, அதன் பிறகு எரியும் கப்பலில் இருந்தவர்கள் இந்திய கடற்படையின் உதவியை நாடினர்.  ஏடன் வளைகுடாவில் நிலைநிறுத்தப்பட்ட இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க் கப்பல்  உடனடியாக உதவிக்கு இறங்கியது. MV கப்பலில் இருந்த பணியாளர்களுக்கு உதவ NBCD குழு மற்றும் தீயணைப்பு கருவிகளை அனுப்பியது.

MV கப்பலில் 22 இந்திய மற்றும் 1 வங்கதேச மாலுமி உள்ளனர். அவர்களை பாதுகாப்பாக காப்பாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த துணிச்சலான மீட்பு நடவடிக்கை இந்திய கடற்படையின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள கடல் பாதைகளின் பாதுகாப்பில் இந்தியாவின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் இந்த சம்பவம் காட்டுகிறது என தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்