ஆஸ்திரேலியாவில் கோர விபத்து….10 பேர் பரிதாப பலி…25 பேர் காயம்.!!

நேற்று இரவு ஆஸ்திரேலியாவின் ஒயின் ஆலையில் நடந்த திருமணத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த பேருந்து , நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஹண்டர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்தானது. இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 25-பேர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த 25 பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அதில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
آسٹریلیا: بس حادثے میں 10 افراد ہلاک، 20 سے زائد زخمی #Australia #Bus #Accident #World https://t.co/TwORWI5Ttg pic.twitter.com/LGhZ8pMGdC
— Dunya News (@DunyaNews) June 12, 2023
மேலும், பேருந்து இன்னும் பக்கவாட்டில் இருப்பதாகவும், மக்கள் அடியில் சிக்கியிருக்கலாம் என்றும், “ஒரு கட்டத்தில்” பேருந்தை தூக்குவதற்கு ஒரு கிரேன் சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், “அது போன்ற ஒரு அழகான இடத்தில் மகிழ்ச்சியான நாள் இவ்வளவு பயங்கரமான உயிர் இழப்புகளுடன் முடிவடைவது மிகவும் கொடூரமானது, மிகவும் சோகமானது மற்றும் மிகவும் நியாயமற்றது” என்று கூறியுள்ளார்.