ஜப்பான் கடற்பகுதியில் மூழ்கிய ஹாங்காங் சரக்கு கப்பல்.! 6 சீனர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு.!
ஜப்பான் கடற்பகுதியில் கப்பல் மூழ்கி விபத்தானத்தில் 6 சீனர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
ஜப்பான் கடற்பகுதியில் சீனாவை சேர்ந்த ஜின் தியான் (Jin Tian) என்ற கப்பல் மூழ்கியாதல் கப்பலில் பயணம் செய்த 6 சீனர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த கப்பல் சீனா மற்றும் மியான்மரில் இருந்து பணியாளர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது ஜப்பான் கடற்பகுதியில் மூழ்கி விபத்து ஏற்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக கப்பலில் இருந்த 6 சீனர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள டான்ஜோ தீவுகளுக்கு மேற்கே 110 கிலோமீட்டர் தொலைவில் கப்பல் மூழ்கும் முன் அவசர கால தகவலை அனுப்பியது. இதனையடுத்து ஜப்பானின் கடலோர காவல்படை, இராணுவத்தின் பல கப்பல்கள் மற்றும் விமானங்களும் கப்பல் மூழ்கிய இடத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதுவரை 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் இறந்துள்ளதாகவும் அதில் 6 பேர் சீனர்கள் என்றும் மீட்பு துறையினர் தெரிவித்தனர். மீட்பு துறையினர் தொடர்ந்து தேடலில் ஈடுபட்டு வருகின்றனர்.