பெண்களின் வரலாற்று விண்வெளி பயணம்! பிரபல பாப் பாடகர் கேட்டி பெர்ரி உட்பட 6 பேர்!
வரலாற்றில் முதல்முறையாக பெண்கள் மட்டுமே அடங்கிய 6 பேர் கொண்ட குழு 10 நிமிட விண்வெளி பயணத்தை மேற்கொண்டு திரும்பியுள்ளனர்.

டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue Origin) நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் (New Shepard) விண்கலத்தில் சுமார் 10 நிமிடங்கள் நீடித்த விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
இந்தப் பயணம் ஏப்ரல் 14 ஆம் தேதி, அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸில் உள்ள புளூ ஒரிஜின் நிறுவனத்தின் ஏவுதளத்தில் இருந்து காலை 8:30 மணிக்கு (CDT) தொடங்கியது. இந்தப் பயணம், 1963 ஆம் ஆண்டு சோவியத் விண்வெளி வீராங்கனை வாலண்டினா டெரெஷ்கோவா தனியாக மேற்கொண்ட விண்வெளிப் பயணத்துக்குப் பிறகு, முதல் முறையாக பெண்கள் மட்டுமே அடங்கிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட விண்வெளி முயற்சியாகும்.
பயணத்தில் யாரெல்லாம் பங்கேற்றவர்கள்?
- லாரன் சான்செஸ் – பத்திரிகையாளர் மற்றும் ஜெஃப் பேசோஸின் வருங்கால மனைவி.
- கேட்டி பெர்ரி – புகழ்பெற்ற பாப் பாடகி.
- கெயில் கிங் – அமெரிக்க செய்தி தொகுப்பாளர்.
- ஆயிஷா பாவே – நாசாவின் முன்னாள் விஞ்ஞானி.
- அமண்டா நுயென் – விண்வெளி ஆய்வு விஞ்ஞானி.
- கெரியான் ஃபிளின் – திரைப்படத் தயாரிப்பாளர்.
ஜெஃப் பேசோஸ் அடுத்த இரண்டு மாதங்களில் லாரன் சான்செஸை திருமணம் செய்யவிருக்கும் நிலையில், புளூ ஒரிஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் விண்கலத்தில் இந்த சிறப்பான விண்வெளி பயணம் திட்டமிடப்பட்டது.
மேற்கு டெக்ஸாஸில் இருந்து ஏவப்பட்ட இந்த விண்கலம், வெறும் சில நிமிடங்களே நீடித்த பயணத்தை மேற்கொண்டது. புளூ ஒரிஜின் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்தப் பயணம் மொத்தம் 10 நிமிடங்கள் 21 விநாடிகள் நீடித்தது. விண்கலம் கார்மன் கோட்டை (விண்வெளியின் எல்லை) தொட்டு பூமிக்குத் திரும்பியது. இந்தப் பயணத்தின்போது, ஆறு பெண்களும் விண்வெளியில் மிதந்து, பூஜ்ஜிய ஈர்ப்பு நிலையை (Zero Gravity) அனுபவித்தனர்.
மேலும், விண்கலத்தின் காப்ஸ்யூல் மூன்று பாராசூட்களின் உதவியுடன் டெக்ஸாஸ் பாலைவனத்தில் பத்திரமாக தரையிறங்கியது. பயணத்துக்குப் பின், கேட்டி பெர்ரி மற்றும் கெயில் கிங் ஆகியோர் தரையைத் தொட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025