84 ஆண்டுகளில் கலிபோர்னியாவை கடந்த முதல் வெப்பமண்டல ஹிலாரி புயல்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை 84 ஆண்டுகளில் இல்லாத முதல் வெப்பமண்டல ஹிலாரி புயல் தாக்கியது. தெற்கு மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா கரையை கடந்த ஹிலாரி புயல், கடற்கரையில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. இதனால், மாநிலத்திற்குள் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா தீபகற்பத்தின் வடக்கே, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்றின் வேகத்துடன் ஹிலாரி புயல் கரையைக் கடந்ததாக அமெரிக்க தேசிய சூறாவளி மையம் (NHC) தகவல் தெரிவித்துள்ளது. ஹிலாரி புயல் வலுவடைந்தாலும், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு எச்சரித்துள்ளனர்.
கரையை கடந்த ஹிலாரி புயல், மாநிலத்திற்குள் திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தியது. இதனால், மெக்சிகோவின் சான்டா ரோசாலியா நகரில், கார் ஒன்று பெருக்கெடுத்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். மேலும், காரில் இருந்த நான்கு பேரை மீட்புப் பணியாளர்கள் காப்பாற்றினர்.