அதிவேக நெட்வொர்க்: 48 செயற்கைக்கோள்களை ஏவிய ஸ்பேஸ் எக்ஸ்.!
அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 48 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது.
அதிவேக இணையத்துக்காக எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், 48 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது. கலிபோர்னியாவின் வான்டர்பெர்க் ஏவுதளத்தில் இருந்து, ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் 48 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டது.
ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஃபால்கன் 9 இன் முதல் நிலை பசிபிக் பெருங்கடலில் நிறுத்தப்பட்ட ஆஃப் கோர்ஸ் ஐ ஸ்டில் லவ் யூ ட்ரோன்ஷிப்பில் தரையிறங்கியது. இதன்மூலம், இணையம் முற்றிலும் கிடைக்காத இடங்களுக்கும் குறைந்த செலவில் அதிவேக இணையத்தை ஸ்டார் லிங்க் வழங்கும் என ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது.